திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 85 கோடி செலவில் கட்டப்பட்ட சந்திப்பு பேருந்து நிலையம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 16 ஏப்ரல், 2025

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 85 கோடி செலவில் கட்டப்பட்ட சந்திப்பு பேருந்து நிலையம்.

திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுமார் 85 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சந்திப்பு பேருந்து நிலையம் இயங்க தொடங்கி ஓராண்டு காலம் ஆகிறது.

ஆனால் இன்றுவரை முழு பயன்பாட்டில் இயங்கவில்லை, பேருந்துகள் மட்டுமே வந்து செல்கிறதே தவிர, வேறு எந்த அடிப்படை வசதிகளும் பூர்த்தி அடையவில்லை. நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மக்கள் இந்த சந்திப்பு பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். 

தவிர இதன் கீழ் தளத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆயிரகணக்கான வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி உள்ளது. இருந்தும் மக்களுக்கு பயன்பட வில்லை. காரணம் அரசு அதிகாரிகள் அலட்சியமும், மெத்தன போக்கும் என்றே எண்ணலாம்.

இந்தப் பேருந்து நிலையத்தில் செயல்படும் பொதுக்கழிப்பிடம் மிகவும் மோசமாகவும், மிகுந்த அளவிற்கு துற்நாற்றமும், அசுத்தமாக உள்ள கழிவறைகள் உடைந்தும் பராமரிப்பின்றி கிடக்கிறது. மேலும் இதனை பராமரிப்பு செய்ய போதுமான பணியாளர்கள் பணியில் இல்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இனியும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் ரகசியம் என்ன? என நொந்து போகும் பயணிகள்.

எனவே அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நமது நிருபர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad