நமது நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டு தோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2024-ம் ஆண்டில் 1,056 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 3 கட்டங்களை நடத்தப்பட்டது.
இதில் 1,009 பேர் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 50 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் காமராஜ், சங்கரபாண்டியராஜன், ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ்-ராமலட்சுமியின் மகனான சங்கரபாண்டியராஜன், தமிழ்வழியில் தேர்வெழுதி 807வது இடத்தை பிடித்துள்ளார். தமிழுக்கும், குலாலர் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு, திருநீலகண்டர் நாயனார் குயவர் குலாலர் சமூக நலன் மற்றும் சல்வி அறக்கட்டளை தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக இளைஞரணி செயலாளருமான ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து பாராட்டு தெரிவித்துள்ளதுடன் மேன்மேலும் வளர வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக