கிரீன் வேலி சிபிஎஸ்இ பள்ளியில் 7ம் ஆண்டு விழாவில் வி ஐ டி வேந்தர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 21 ஏப்ரல், 2025

கிரீன் வேலி சிபிஎஸ்இ பள்ளியில் 7ம் ஆண்டு விழாவில் வி ஐ டி வேந்தர் பங்கேற்பு!

கிரீன் வேலி சிபிஎஸ்இ பள்ளியில் 7ம் ஆண்டு விழாவில் வி ஐ டி வேந்தர் பங்கேற்பு! 
குடியாத்தம் , ஏப் 19 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கிரீன் வேலி சிபிஎஸ்இ பள்ளியில் 7 ம் ஆண்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் 
சிறப்பு அழைப்பாளராக விஐடி கல்வி நிறுவனர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் கலந்து கொண்டு அவர் ‌கூறியது பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் டாக்டர் ஏ.எஸ்.டி. அப்சர் பாஷா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நல்ல படிப்பதற்கு சிறப்புரையாற்றினார்
தொடர்ந்து கிரீன் வேலி சிபி எஸ் இ பள்ளியின் தாளாளர் ஆயிஷா ஜாவித் தெரிவித்தது கிரீன் வேலி சிபி எஸ் இ பள்ளியில் உலக தர வாய்ந்த கல்விக் கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார் இந்நிகழ்ச்சியில் குடியாத் தம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் 
ஒன்றிய குழு உறுப்பினர் உத்தரகுமாரி 
மற்றும் மருத்துவர்கள் இன்னர்வீல கிளப் நிர்வாகிகள் பெற்றோர்கள் மானவ மாணவிகள் கலந்து கொண்டனர்
இறுதியில் நெல்லூர் பேட்டை முன்னாள் தலைமை ஆசிரியர் டி எஸ் விநாயகம் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad