சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 77 ஆம் ஆண்டு விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் நடைபெற்று வரும், ஐம்பெரும் விழாவின் முதல் நாள் நிகழ்வாக கல்லூரியின் 77 ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து விளையாட்டு விழாவின் சிறப்புகளையும், மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றதைப் பாராட்டியும் பேசினார். கல்லூரியின் விளையாட்டுக் குழு உறுப்பினரும், தாவரவியல் துறைத் தலைவருமான முனைவர் கோமளவல்லி வரவேற்புரை ஆற்றினார். அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியின் மேனாள் உடற்கல்வி இயக்குநர் முனைவர் விஸ்வலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போதைய சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட வீரருமான ராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் விளையாட்டுக் குழு உறுப்பினரும், ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியருமான சமுனா ஜெரின் அறச்செல்வி நன்றி உரையாற்றினார். விழாவில் ஏராளமான பேராசிரியர்களும், ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக