நெமிலி அருகே ரூ. 74 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர் ஆர். காந்தி அடிக்கல் நாட்டினார்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

நெமிலி அருகே ரூ. 74 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர் ஆர். காந்தி அடிக்கல் நாட்டினார்!

நெமிலி அருகே ரூ. 74 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர் ஆர். காந்தி அடிக்கல் நாட்டினார்!
ராணிப்பேட்டை , ஏப் 11

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பூர், கீழ்வீதி உள்ளிட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் சித்துறையின் சார்பில் 2024 25ம் ஆண்டின் கனிமவள நிதி திட்டத்தின் கீழ் ரூ. 74 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர். சந்திரகலா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் கலந்து கொண்டு திருமால்பூரில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மேக்லின் கால்வாய் குறுக்கே சாலை கல்வெட்டு கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நெல்வாயில் முன்விரோத காரணத்தால் தீயிட்டு எரித்ததில் இறந்த தமிழரசன் குடும்பத்திற்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ்வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். பின்னர் கீழ்வீதி வேப்பேரி சாலையில் ரூ.20 லட்சம், மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் என 2 இடங்களில் சாலை கல்வெட்டுகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் திட்ட இயக்குநர். ஜெயசுதா, தாசில்தார். ராஜலட்சுமி, பிடிஓ ஜெயஸ்ரீ, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, மாவட்ட கவுன்சிலர். சுந்தரம்பாள், ஒன்றிய செயலாளர்கள். எஸ்.ஜி.சி பெருமாள், ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், கிளை செயலாளர். மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர். வெங்கடேசன், விஏஓ கோபிநாத், பஞ். தலைவர்கள். துலுக்கானம், ஆனந்தி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad