பூண்டிமாதா பேராலயத்தில் 6ம் ஞாயிறு குருத்தோலை பவனி.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் தவக்காலத்தின் 6வது ஞாயிறு குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்று. இங்கு தவக்காலத்தின் 6வது ஞாயிறு தினத்தில் புதுமைகள் பல புரிந்த இயேசுகிறிஸ்து எருசெலேம் நகருக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்க நகர மக்கள் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவு கூறும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை பூண்டிமாதா மக்கள் மன்றத்திலிருந்து குருதோலை பவனி நடந்தது. கிறிஸ்துவ மக்கள் இறை பாடலுடன் கையில் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக பூண்டிமாதா பேராலயத்தை அடைந்தனர். பவனியில் பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன் அந்தோனிராஜ், பூண்டிமாதா தியானமைய இயக்குனர் எஸ்.ஆல்பர்ட்சேவியர், உதவித் தந்தைகள் எஸ்.ஜான் கொர்னேலியுஸ் எஸ்.ஜெ.செபாஸ்டின் ஆன்மீக தந்தைகள் ஏ.அருளானந்தம், பி.ஜோஸப் மற்றும் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பேராலய அதிபர் தலைமையில் திருப்பலி நடந்தது. திருப்பலியிலும் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக