63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு 18ஆம் ஆண்டு அன்னதானம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு 18ஆம் ஆண்டு அன்னதானம்!


63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு 18ஆம் ஆண்டு அன்னதானம்
காட்பாடி , ஏப் 06 -

வேலூர் மாவட்டம் காட்பாடி தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நலச் சங்கத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கிளையின் சார்பாக இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள்  63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு 18ஆம் ஆண்டு அன்னதான விழா காஞ்சிபுரம் ஓங்கோல் சங்கர பத்தர் 16 கால் மண்டப சத்திரத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தலைவர் சி. தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார் நிறுவனர் மற்றும்செயலாளர்முனைவர் செ.நா.ஜனார்த்தனன்ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன் ஆகியோர் அன்ன தான நிகழ்வினை தொடக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட குழுவின் ஒருங்கி ணைப்பாளர்கள் எம்.ஆர்.பி. சதீஷ், டி. எம்.கதிர்வேலு,  டி.கே.ஜி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கே.சங்கரநாராயணன், கே.குமாரசாமி, ராஜேந்திரன், நமச்சி வாயம், கே.சரவணன், முரளி, எஸ். சிவக்குமார் வருவாய் அலுவலர் கார்த்திகேயன் உதவி கண்காணிப்பாளர் ஜி.சிவா, ஜி.கேசவன், ஆகியோர் அன்னதானம் வழங்கும் பணியினை மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் ஆண்டுதோறும் நடைபெறும் 63 நாயன்மார்களுக்கான விழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad