கோவையில் பதுங்கிய பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் – 5 தனிப்படை புலனாய்வு அமைத்து போலீசார் தேடல்.
மதுரை வரிச்சியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் ஒரு பிரபல ரவுடியான அவர் மீது கொலை, கொள்ளை ,ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து ,என்ன பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இந்த வரிச்சியூர் செல்வம் கோவையில் உள்ள செல்வ புரத்தில் பதுங்கி இருப்பதாக கோவை காவல்துறைக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது தகவலைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் செல்வத்தை பிடிக்க 5 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன மேட்டுப்பாளையம் சூலூர் பொள்ளாச்சி தொண்டாமுத்தூர், மற்றும் இந்தக் குழுக்கள் தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் செல்வபுரத்தில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வரிச்சியூர் செல்வம் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கும் பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து விரைவில் ரவுடி செல்வம் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறையினர் அறிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக