ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில்..........தவக்கால 4வது வார சிலுவை பாதை வழிபாடு.............. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில்..........தவக்கால 4வது வார சிலுவை பாதை வழிபாடு.............. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை.

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில்..........தவக்கால 4வது வார சிலுவை பாதை வழிபாடு.............. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

தவக்காலத்தின் 4ஆம் வாரம் இந்த மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் அருகே ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக்கெபி திருத்தலத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது . 

இதில் 14 ஸ்தலங்களில் இயேசுவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் ஆலந்தலை திருக்குடும்ப உயர்நிலைப்பள்ளி மற்றும் திருக்குடும்ப தொடக்கப்பள்ளியினைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் இணைந்து திருச்சிலுவைப்பாதை வழிபாட்டினை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். 

இந்த சிலுவைப் பாதை வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி, திருத்தொண்டர் ஸ்டாலின் திருத்தல நிதி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad