திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதரஸா மன்பஉல் ஹசனாத் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி 40-ஆம் ஆண்டு விழா,பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஜனாப். எம்.முகம்மது அலி பள்ளித் தொடர்வாளர் தலைமை தாங்கினார்.
அதில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், விளை-யாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு
பிடிஎ.தலைவர்
எ.எம்.ஜபருல்லாஹ் பரிசு வழங்கினார்.
அட்டவணைப்பள்ளி தலைவர்,
ஹாஜி. ஜீ.முகம்மது இப்ராஹிம்.முத்தவல்லி முன்னிலை வகித்தனர்.
பள்ளிப் பொறுப்பு தலைமை ஆசிரியை ஜசீமாபர்வீன் பள்ளி ஆண்டு அறிக்கை வாசித்தார். ஈரோடு மதரஸா இஸ்லாமிய பள்ளி ஓய்வு தலைமை ஆசிரியர் அனிபா சிறப்புரையாற்றினார்.
அட்டவணைப் பள்ளி இமாம் மௌலானா. பி.மீரான்கனி,ஜமால் பள்ளிவாசல்
மிஸ்பாஹி பேஷ் , மௌலானா.பேஷ் இமாம்,ஹஜரத் எ.அப்துல்லா ஹஸனீ மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக