தொடர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரி 3-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது- வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவு
குடியாத்தம் , ஏப் 03
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் கடந்த மாதம் 7-ந் தேதி குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி அருகே பைபாஸ்சாலை பகுதியில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர், அப்போது அந்த வழியாக 1 கிலோ கஞ்சாவை விற்ககொண்டு வந்த குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி நாகு என்ற நாகராஜன் (வயது 31) கைது செய்யப்பட்டார்,
அவரை போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர் மேலூம் இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதால் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட எஸ் பி மதிவாணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார், இவர் ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் கைதான நிலையில் தற்போது 3-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக