திருடப்பட்ட 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த காட்பாடி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

திருடப்பட்ட 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த காட்பாடி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார்!

திருடப்பட்ட 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த காட்பாடி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார்!

காட்பாடி , ஏப் 08 -
 
வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங் களை தடுக்கும் பொருட்டு, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் உத்தரவின் பேரில், இன்று 08.04.2025-ம் தேதி, காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தூர் பேருந்து நிலையம் பகுதியில், காட்பாடி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் ஆகியோர் இணைந்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் முன்னுக்குப்பின் முரணான தவறான தகவல்களை கொடுத்ததை அடுத்து மேற்படி சந்தேக நபர் திருவள்ளுவர் மாவட்டம் திருநின்ற வூர் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பதும், அவரிடமிருந்து மொத்தமாக 34 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அந்த நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய காட்பாடி போலீசார் மற்றும் தனி படை குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி னார் என மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப் படுகின்றது என்ன தெரிவித்தனர் 

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad