ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி விபத்து. இருவர் உயிரிழப்பு. 2 பேர் காயம்.
வாணியம்பாடி,ஏப்.7-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ் வில் பங்கேற்க ஆம்பூர் பகுதியை சேர்ந்த டெல்லிபாபு மற்றும் பழனி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ் சாலையோரம் நின்று கொண்டிருந்த போது கோவையிலிருந்து வேலூர் நோக்கி சென்ற மினி லாரி எதிர்ப்பாராத விதமாக இவர்கள் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். படுகாயமடைந்த டெல்லிபாபு சிகிச் சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனை க்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார்.மேலும் சாலையோரம் நின்று கொண்டு இருந்த வெங்கடேசன் மற்றும் மினிலாரி ஓட்டுநர் முனிஸ்வரன் ஆகிய இருவரும் காயம் அடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆம்பூர் அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க சென்ற இருவர் அதே பகுதியில் டாட்டா ஏசி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி தாலுகா செய்தியாளர்
R.மஞ்சுநாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக