காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் குமரன் நர்சிங் கல்லூரியில் பஹல்காம் துப்பாக்கி சூடு உயிர் நீத்த 28 பேருக்கு அஞ்சலி!
காட்பாடி, ஏப் 27 -
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், குமரன் மருத்துவமனை இணைந்து குமரன் நர்சிங் கல்லூரி மாணவிகள் பஹல்காம் துப்பாக்கி சூடு சம்பத்தில் உயிர் நீத்த 28 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.நிகழ்விற்கு அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைம
தாங்கினார் . முன்னதாக கல்லூரி முதல் வர் மீனாகுமாரி வரவேற்று பேசினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மற்றம் வேலூர் சி.எம்.சி கிளை செயலாளர் டாக்டர் அ.மு.இக்ராம் சிறப்புரையாற்றினார்.
அவை துணை தலைவர் குமரன் ஆர்.சீனிவாசன் மத நல்லிணக்க உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.ரெட்கி ராஸ் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன், ஆசிரியை பேபி ஆர்த்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பஹல்காம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் நீத்த 28 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குமரன் நர்சிங் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி கையிலேந்தி மௌன அஞ்சலியும் மத நல்லிணக்க தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் எடுத்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக