முறையான ஆவணங்கள் இன்றி இயங்கும் 25 ஆட்டோக்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!
வேலூர் , ஏப் 10 -
வேலூர் மாநகரில் ஏராளமான ஆட்டோக் கள் இயங்கி வருகிறது. இதில் முறை யான ஆவணங்கள் இல்லாமலும்,போக்கு வரத்து விதிகளை பின்பற்றாமலும் சில ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், சப்-இன்ஸ் பெக்டர் ரஜினி தலைமையிலான
போலீசார் பல இடங்களில் வாகன தணிக் கையில் ஈடுபட்டனர்.அப்போது வாகன உரிமம், காப்பீடு இல்லாமல் ஆட்டோவை ஓட்டியது என பல்வேறு விதிகளை மீறியதாக 25 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக