அதிமுக சார்பில் நடைபெற்ற நீட் தேர்வில் உயிர் நீத்த 22 மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி கையில் ஏந்தி அஞ்சலி செலுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை ஏப் 20 -
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நீட் தேர்வு ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு நிறைவேற்றாத விடியா திராவிட மாடல் திமுக அரசை கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ் எம் சுகுமார் தலைமையில், ராணிப் பேட்டை மேற்கு மாவட்டம் மாணவரணி செயலாளர் எம் சி விஜய் ஆனந்த் ஏற்பாட்டில், ராணிப்பேட்டை நகர கழக செயலாளர் கே பி சந்தோஷம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்எல்ஏ மற்றும் சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஜி சம்பத் ஆகியோர்கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வால்
உயிரிழந்த 22 மாணவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கருப்பு சட்டை அணிந்து, மெழுகுவர்த்தி கையில் ஏந்தி மௌன அஞ்சலியை செலுத்தினர். இதில் கிழக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர். பிரபு, முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர். சுமைதாங்கி ஏழுமலை மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து இதில் கொண்டனர்.
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக