நெமிலி அருகே மேலாந்துரை ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி பெ. வடிவேலு நேரில் சென்று ஆய்வு!
ராணிப்பேட்டை ,ஏப் 05 -
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேலாந்துரை பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச் சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் தொடங்கி வைத்து, பணி நடைபெற்று வந்தது. மேலும் இப்பணியை ஒன்றியக்குழு தலைவர் பெ. வடிவேலு அவர்கள் ஆய்வு செய்து, விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக் கொண்டு வரவேண்டும் என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக