ராணிப்பேட்டை ,ஏப்ரல் 02
ராணிப்பேட்டை மாவட்ட காவல் காவல்துறையினருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் மூன்று தனி படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து ஆற்காடு நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட சாலை பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது மூன்று வெவ்வேறு பகுதிகளில் மூன்று கார்களில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் மேலும் கஞ்சாவை கடத்தி வந்த ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த குப்தா சரண் சாகு,சுதிர் அல்பேரியா, தேப்பரதா தாஸ்,
ரெலிமஜி,கவுரப் திருப்பிடியா ஆகிய ஆறு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் .
ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக