2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கான விருதை தட்டிச்சென்ற மானாமதுரையை சேர்ந்த டிராகன் ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர்.
கோயம்புத்தூரில் உள்ள 'கோஇந்தியா ஆடிட்டோரியத்தில்' "வாகை விருதுகள் 2025" என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் "2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கான விருது" கலந்து கொண்ட சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த "டிராகன் ஸ்போர்ட்ஸ் கிளப்" பெயர்சியாளர் திரு கே. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தமிழ்ச்செல்வன் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாகை விருதுகள் 2025 சார்பாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறந்த பயிற்சியாளருக்கான விருதை பெற்று ஊர் திரும்பிய தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு கட்சியினர், ஊர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விருது பெற்ற தமிழ்ச்செல்வன் அவர்கள் மானாமதுரையில் இயங்கி வரும் தமிழ் மைந்தன் ஐஏஎஸ் அகாடமி நிறுவனராகவும், இலக்கிய ஆசிரியராகவும், கல்வி மற்றும் விளையாட்டு சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக