ஆழ்வார்திருநகரி ஏப்ரல் 15. உள்ளாட்சி களில் ஆண்டு தோறும் சொத்துக்கள் வரி. குடிநீர் வரி. தொழில் வரி. மற்றும் உரிமங்கள் ஆகியவற்றிற்கு ஏப்ரல் மாதம் கேட்பு தயாரிப்பு பணி நடைபெறும்.
அதேபோல் ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் இந்த ஆண்டும் கேட்பு தயாரிக்கப்பட்டு வரி வசூல் துவங்கியது. ஆண்டுதோறும் வீட்டு வரி. குடிநீர் வரி செலுத்தி வரும் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி 2025- 2026 ஆண்டிற்கு முதல் நபராக வரியை செலுத்தினார்.
அந்த ரசீது செயல் அதிகாரி கு. ராஜா ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி யிடம் வழங்கினார். அடுத்தாக பாரதியார் தெரு ரஞ்சித் வரி செலுத்தினார்.
அலுவலக தலைமை எழுத்தர் கிளாமர். வரிவசூலிப்பாளர்கள் எட்வர்ட். சாந்தா. தட்டெழத்தர்கள் சொர்ண லட்சுமி. திவ்யா அலுவலக உதவியாளர் மணி. ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக