சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் 2002-2005-இல் பயின்ற மாணவர்கள் சார்பாக ஆங்கிலத் துறைக்கு யூபிஎஸ் மற்றும் இன்வெர்ட்டர் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு உதவிப் பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். ஆங்கிலத் துறையில் 2002-2005 ஆம் ஆண்டில் இளங்கலை ஆங்கிலம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தற்போதைய பேராசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினர். மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பாக துறையின் பயன்பாட்டிற்காக UPS மற்றும் இன்வெர்ட்டர் வழங்கினர். ஆங்கிலத் துறையின் சார்பாக முன்னாள் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, துறைத் தலைவர் முனைவர் ஜெயசாலா வாழ்த்துரை வழங்கினார்.முன்னாள் மாணவியும் சேலம் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியையுமான முனைவர் கமலாதேவி 20 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்துறையில் பயின்ற அனுபவங்களையும்,தற்போதைய கல்விமுறை குறித்தும் மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டர். மேலும் முன்னாள் மாணவரும்,சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன் மாணவர்களிடம் தங்களின் கல்லூரிக்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் சத்யா,சந்திரசேகர் மற்றும் பேராசிரியர்கள்,மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.இறுதியாக முன்னாள் மாணவரும், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளருமான முனைவர் பஞ்சாட்சரம் நன்றியுரை கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக