காரைக்குடியில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா, 2000 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வருக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஏப்ரல், 2025

காரைக்குடியில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா, 2000 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வருக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்

IMG-20250426-WA0089

காரைக்குடியில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா, 2000 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வருக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.மாங்குடி அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி காரைக்குடி வட்டத்தில் ரூபாய் 200 கோடி முதலீட்டினை ஈர்க்கும் விதத்திலும், 2000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையிலும், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்புத்துறை மானிய கோரிக்கையில்  மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் சிப்காட் பூங்கா திட்டத்தினை அறிவித்தார்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதிக்கு புதிதாக சிப்காட் வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதையடுத்து, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும், இத்திட்டத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களையும் மரியாதை நிமித்தமாக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்கள் சந்தித்து தன் சார்பாகவும் தனது தொகுதி வாக்காளர் பெருமக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad