மானாமதுரை தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தின் 200 வருட பழமையான ஆலமரமானது சரிந்து விழுந்ததையடுத்து பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

மானாமதுரை தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தின் 200 வருட பழமையான ஆலமரமானது சரிந்து விழுந்ததையடுத்து பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.

 

IMG-20250402-WA0004

மானாமதுரை தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தின் 200 வருட பழமையான ஆலமரமானது சரிந்து விழுந்ததையடுத்து பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை நடுவில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் ஆலயத்தின் ஆலமரமானது இரவு இரண்டாக பிளந்து சரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த ஆலமரமானது சுமார் 200 வருடங்கள் பழமையானது. இக்கோயிலானது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில்போது இந்த ஆலமரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஊழியர்கள் நான்கு ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், இக்கோயில் ஆலமரத்தை அப்படியே ஒதுக்கி விட்டு சாலை அமைத்தனர் என்று பக்தர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தகோடி பெருமக்கள் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad