திருட்டு போன 2 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மீட்பு மர்ம நபருக்கு வலை வீச்சு!
காட்பாடி தாலுகா ஜாப்ராப்பேட்டை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்பால் இவர் வேலை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்தார். திரும்பவும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அதில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து விருதுநகர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தண்டலம் கிருஷ்ணா புரத்தில் மோட்டார் சைக்கிள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து புகார் கொடுத்த 2 மணி நேரத்தில் போலீசார் மோட்டார் சைக்கிளை மீட்டனர். மேலும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று தண்டலம்கிருஷ்ணாபுரத்தில் விட்டுச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக