ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 63) என்பவர் மது விற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமதல் செய்யப்பட்டன.
அதேபோல் மது விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த லதா (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கொங்கர்பாளையம் சுடுகாடு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கொங்கர்பாளையம் குமரன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் குப்புராஜ் (29), கொங்கர்பாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்த பொன்னாக்காள் (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக