வி ஸ்கொயர் ரேஸ் கிளப் சார்பில் உடன்குடியில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் முதல் பரிசாக ரூ.1லட்சம் வழங்கல். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 28 ஏப்ரல், 2025

வி ஸ்கொயர் ரேஸ் கிளப் சார்பில் உடன்குடியில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் முதல் பரிசாக ரூ.1லட்சம் வழங்கல்.

வி ஸ்கொயர் ரேஸ் கிளப் சார்பில் உடன்குடியில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் முதல் பரிசாக ரூ.1லட்சம் வழங்கல்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் வி ஸ்கொயர் ரேஸ் கிளப் சார்பில் 3வது சீசன் அகில இந்திய அளவிலான நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. உடன்குடி சிவலூர் மின்வாரிய மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு சிவலூர் ஊர் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் கண்ணன் வந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் அமிர்தா எஸ் மகேந்திரன், உடன்குடி நகர அதிமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் முருங்கை டி.மகாராஜன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராஜதுரை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் செட்டியாபத்து ராம்குமார், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜ்குமார், கழக பேச்சாளர் மானாடு பால்துரை, குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர்கள் அந்தோணி, துரைசிங்கம், சுடலைமுத்து மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில் முதல் பரிசு பெற்ற நாயின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2வது பரிசாக ரூ.50ஆயிரம், 3வது பரிசாக ரூ..30ஆயிரம், 4வது பரிசாக ரூ.20ஆயிரம், 5வது பரிசாக ரூ.10ஆயிரம், 6வது பரிசாக ரூ.7ஆயிரம், 7வது பரிசாக ரூ.5ஆயிரம், 8வது பரிசாக ரூ.3ஆயிரம் வழங்கப்பட்டது. 9 முதல் 16வது வரை இடம் பிடித்த நாய்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad