நவத்திருப்பதி கோவில்களில் முதலாவது கோவிலான, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் த தி கொடியேற்றத்துடன் தொடங்கியது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

நவத்திருப்பதி கோவில்களில் முதலாவது கோவிலான, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் த தி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நவத்திருப்பதி கோவில்களில் முதலாவது கோவிலான, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் த தி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் சுவாமி கள்ள பிரான் சுவாமி, சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது. 5-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல் கோஷ்டி, திருமஞ்சனம் நடைபெற்றது. 

காலை 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான், திருப்புளியங்குடி காய்சினி வேந்தப் பெருமாள், நத்தம் எம்இடர்கடிவான் ஆகியோருக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நடைபெற்றது. இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்த வினியோக கோஷ்டியும் நடைபெறு கிறது. அதனைத் தொடர்ந்து, இரவு 9.10 மணிக்கு அன்னவாகனத்தில் எழுந்தருளும் சுவாமி நம்மாழ்வாருக்கு, உற்சவர்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்றபிரான், திருப்புளியங்குடி, காய்சினிவேந்தன், நத்தம் எம்இடர்கடிவான் ஆகிய 4 பெருமாள்களும், கருட வாகனத்தில் எழுந்தருளும் கருட வாகனத்தில் நடைபெறுகிறது. 

நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு நாராயணன், அனந்த பத்மநாபன், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், திருவேங்கடத்தான், ஸ்ரீவேங்கட கிருஷ்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் முருகன், பா.ஜ.க. அமைப்பு சாரா மாவட்ட தலைவர் சித்திரை உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad