திருச்செந்தூர் வட்டத்தில் வருகின்ற 16.04.2025 அன்று "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

திருச்செந்தூர் வட்டத்தில் வருகின்ற 16.04.2025 அன்று "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.


திருச்செந்தூர் வட்டத்தில் வருகின்ற 16.04.2025 அன்று நடைபெறவுள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பதவத் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழக முதல்வர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் திருச்செந்தூர் வட்டத்தில் 16.04.2025 அன்று தங்கி முகாமிட்டு திருச்செந்தூர் வட்டத்திலுள்ள அனைத்துதுறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். 

அன்றைய தினம் மதியம் 2.30 முதல் 4.30 வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொள்வார். 

அதன் பின்னர் 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முற்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட களப்பயணங்கள் / அலுவலக ஆய்வுகள் குறித்துகேட்டு அறிவார்கள். மீண்டும் நகர்ப்புறம் / கிராமஊராட்சிகள் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசுதுறைகளின் சேவை வழங்குதல் / திட்டசெயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்ய உள்ளார். 

அன்றைய இரவு அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி மறுநாளான 17.04.2025 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர் / சுகாதாரம் / தூய்மை / போக்குவரத்து / மாண்புமிகு முதல்வர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.  

மக்கள் இருப்பிடம் தேடி சேவை அளிக்கும் வகையிலும் களஆய்வின் போது கண்டறியப்பட்ட அவ்வட்ட மக்களின் தேவைகள் குறித்த முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைத்திடும் வகையிலும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள 

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமின் போது பொதுமக்கள், தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கிடலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad