134 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு பானைகள் ஏந்தி கொண்டாட்டம்!வன்னியரசு பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

134 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு பானைகள் ஏந்தி கொண்டாட்டம்!வன்னியரசு பங்கேற்பு!

திருப்பத்தூர் , ஏப் 14 -

திருப்பத்தூர் மாவட்டம் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு பானைகள் ஏந்தி கொண்டாட்டம்!வன்னியரசு பங்கேற்பு!அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தை கட்சியை அங்கீகரித்ததன் காரண மாகவும்  அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டும் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மண்டல செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ‌ மேற்கு மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான் தலைமையில் குமார் 500க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தை கட்சியின் சின்னமான பானைகளை ஏந்தி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து ஜின்னா ரோடு வரை‌  பேரணியாக வந்து  அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இந்த பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலம்பாட்டம் ஆடியும்,  அம்பேத்கர் வேடமணிந்து வந்து 15 கிலோ அளவிலான கேக் வெட்டி அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடி னர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியின்  மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டு அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி தொண்டர்களுக்கு எடுத்துக் கூறினார். அப்போது பேசிய வன்னியரசு அம்பேத்கர் பிறக்கும்போது இந்துவாக பிறந்தார் ஆனால் இறக்கும் போது இந்துவாக இருக்க மாட்டேன் என கூறியதாகவும் இந்து மதமும் சமத்துவம் இல்லாத மாதமாக உள்ளது ‌என பேசினார்.மேலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத் தினர். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் கள் ஓம் பிரகாஷ், ஒன்றியசெயலாளர்கள் என பார் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad