கன்னியாகுமரி - 1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்... ஒருவர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

கன்னியாகுமரி - 1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்... ஒருவர் கைது.

1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்... ஒருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக அஞ்சு கிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் ஷிபின்(27) விற்பனை செய்ய வைத்திருந்த 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்து கைது செய்தனர். 

சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து கஞ்சாவை பதிவுகள் செய்த நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர். பிரவினா மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர், 
தமிழன்  
T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad