ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 11.50 லட்சம் மதிப்பிலான 23 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஜோலார்பேட்டை, ஏப் 13 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடையும் ரயில் களில் கஞ்சா கடத்துவதாக ஜோலார் பேட்டை மத்திய பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
அதன் பெயரில் இரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் நிகில் குமார் குப்தா தலைமையில் எஸ்ஐ டிஜித் மற்றும் சிறப்பு தனி படை போலீஸார் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் வந்தடைந்த ஹலப்பி மற்றும் தன்பாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் சோதனை மேற்கொண்டனர் அப்போது ஹலப்பி ரயிலின் முன்பக்க ஜெனரல் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ஐந்து பண்டல்களில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது அதேபோல தன்பாத் ரயிலில் இரண்டு பண்டல்கள் அடங்கிய 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர் மேலும் மதிப்பு 11 லட்சத்து 50 ஆயிரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? எந்த பகுதியைச் சார்ந்தவர்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பறிமுதல் செய்யப் பட்ட கஞ்சாவை சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக