குடியாத்தம் புதுப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டு எல்லையம்மன் கோவில்
108 சங்காபிஷேக பூஜை!
குடியாத்தம் ,ஏப் 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப் பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ படவேட்டு எல்லையம்மன் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் பூஜை இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு அறங்காவலர் குழு தலைவர் கே எம் ஜி விட்டல் தலைமை தாங்கினார்
அறங்காவலர்கள் ம . சண்முகம் . சுரேஷ் குமார் தீபா மொகிலிஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இன்று காலை 9 மணி அளவில் சங்கு கலச நிர்மலாயம்
விக்னேஸ்வரர் பூஜை மஹா. தீபார்தனை
அன்னதானம் நடைபெற்றது இந்நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் நகர மன்ற உறுப்பினர் சுமதி மகாலிங்கம்
முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா சிவப்பிரகாசம் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் பெரியோர்கள் இளைஞர்கள் ஐயப்பா பக்த சபா மகளிர் அணியினர் புதுப்பேட்டை வாசிகள் திருக்கோவில் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக