தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களுக்கு எதிர்த்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 10 மசோதா ஒப்புதல் வழங்கியதை கொண்டாடிய திமுகவினர்!
ராணிப்பேட்டை , ஏப் 08 -
ராணிப்பேட்டை மாவட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக ராணிப் பேட்டை முத்து கடையில் திமுகவினர் பட்டாசு வெuடித்து கொண்டாட்டம்.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்க ளுக்கு எதிர்த்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 10 மசோதா ஒப்புதல் வழங்கிய தை கொண்டாடும் விதமாக ராணிப் பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகே மாநில சுற்றுச் சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி அவர்கள் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் .
மேலும் இதில் நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், நகர மன்ற உறுப்பினர் அப்துல்லா, அமித்,. நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான திமுகவினர் பல்வேறு கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழக குரல் செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக