ரூ. 1 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது.
தனிப்படை போலீசார் கன்னியாகுமரியில் விசாரணை.
கன்னியாகுமரி , தக்கலை ஆகிய இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் நெப்போலியன். இவர் தற்போது தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார்.
இவர் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் (68) என்பவர்,
கும்பகோணத்தில் ஆடிட்டராக பணியாற்றுகிறார்.
அவருக்கு குலசேகரநல்லூரில் 80 சென்ட் நிலம் உள்ளது. அரசு இதனை தடுப்பணை கட்டுவதற்காக கையகப்படுத்தியது.
நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, 30 தேக்கும் மரங்களை வெட்டியதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்து, அரசு அதிகாரிகள் மரங்களை கைப்பற்றினர்.
நெப்போலியனின் மிரட்டல்.
இதற்குப் பிறகு, நெப்போலியன், தான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் உறவினர் என்று பொய்யாக கூறியும் ஒரு குறிப்பிட்ட அமைச்சர் தனக்குநெருக்கமானவர் என்று கூறி “இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யாமல் தடுக்க சிபாரிசு செய்ய முடியும், அதற்கு ₹1 கோடி கொடுக்க வேண்டும்” என்று ரவிச்சந்திரனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
ரவிச்சந்திரன், மூன்று தவணைகளாக ₹1 கோடி கொடுத்துள்ளார். அதன் பிறகு, நெப்போலியன் மீண்டும் ₹1 கோடி கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன், தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் க்கு புகார் அளித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்ததை அடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நெப்போலியனை தர்மபுரி டோல் பிளாசா அருகே கைது செய்து, தஞ்சாவூர் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் முந்தைய பணியிடங்களில் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், போலீசார் கன்னியாகுமரி , தக்கலை ஆகிய இடங்களில் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இரு குடும்பத்துடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த குடும்பத்தினர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் நேற்று கன்னியாகுமரி வந்த தனிப்படை போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக