எஸ்.எம்.வி.பி பெங்களூர் செல்லக்கூடிய (எண்:226243) ஹவுரா விரைவு ரயில் காலை 10:30 மணிக்கு ரேனிகுண்டாவில் இருந்த புறப்பட்டு திருப்பதி, வேலூர், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை வழியாக பெங்களூர் வரை செல்லும் விரைவு ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயில்வே தண்டவாளத்தின் மேலே செல்லக்கூடிய உயர் மின்னழுத்த மின் கம்பி பழுதாகி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் இயக்க முடியாமல் போனது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சென்னை பெங்களூர் ரயில்வே மார்க்கத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து மின்சார இணைப்பு பொறியாளர்கள் கொண்ட குழுவினர் விரைந்து சென்று உயர் மின்னழுத்த மின் கம்பி சரி செய்தனர். பின்னர் ஒன்றை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பெங்களூர் செல்லக்கூடிய ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக