படகர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் SILLA HALLA நீர்மின் திட்டத்தை எதிர்த்து எற்பாடு செய்த சிறப்பு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

படகர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் SILLA HALLA நீர்மின் திட்டத்தை எதிர்த்து எற்பாடு செய்த சிறப்பு கூட்டம்

AddText_03-31-06.09.21

உதகையில் இன்று படகர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் SILLA HALLA நீர்மின் திட்டத்தை எதிர்த்து எற்பாடு செய்த சிறப்பு கூட்டம் உதகை காபி ஹவுஸ் அரங்கில் நடைபெற்றது.            


கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் A.பொப்லி தலைமை தாங்கினார். பொது செயலாளர் வழக்கறி ஞர் J.B.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளர் திரு.S.ரகு அவர்கள் கலந்து கொண்டு இத்திட்டத்தின் முழு விவரங்களை காணொளி மூலம் விளக்கினார். கூட்டமைப்பின் பல்வேறு சங்கங்களின் கிழ்கண்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திருவாளர்கள் மூர்த்தி (பெங்களூர்),                P. சுப்பிரமணி,விஸ் வேஸ்வரன், ஈஸ்வரன் (குன்னூர்),   A. பில்லன், தேவராஜ்,சந்திரன், கமல சீராளன்(கோத்தகிரி),


ராஜ்குமார், ராஜே ந்திரன், சந்திரன்,அம்பி, நாரா யணன் (கூடலூர்), பீமா கவுடர்,K.K. ராமன், வழக்கறிஞர் Gava.சுப்ரமணி மற்றும் "SAVE SILLA HALLA' கமிட்டி தலைவர் ஆடிட்டர் திரு.சிவலிங்கம், திரு.வேணுகோபால்(NDC), செந்தில் ராம கிருஷ்ணன்,அருண் பெல்லி, ஜனார்தன், திருமதி ராஜேஸ்வரி தேவபெட்டன், வினோத்,மானேஷ் சந்திரன், S.K. ராஜ் (கூடலூர்) ரேவந்த், பெல்லிராஜ் , சிவக் குமார், மகேந்திரன், அமர்நாத்,சரவணன், சிவா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த திட்டம் குறித்து          

கூட்டமைப்பின் நிர்வாகிகள்,SAVE SILLA HALLA' கமிட்டி உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், YBA, நாக்கு பெட்டா நல சங்கம் உட்பட அனைத்து சங்கங்களின் பிரதி நிதிகள் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து இததிட்டதை கைவிட மனு அளிக்க வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad