SDPI கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நெமிலி ஒன்றிய மாணவர் அணி செயலாளர் முருகன் அவர்கள் பங்கேற்பு!
ராணிப்பேட்டை ,மார்ச் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் SDPI கட்சி ராணிபேட்டை கிழக்கு மாவட்டம் நெமிலி நகரம் ஒருங்கிணைத்த சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நகர தலைவர் ரஹமத்துல்லா தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் அப்பாஸ் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச் சியில் SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் A.K.கரீம் அவர்கள் சிறப்புரை யாற்றினார். உடன் ராணிபேட்டை கிழக்கு மாவாட்ட தலைவர் காஜாமொய்தீன் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆஇஅதிமுக நெமிலி ஒன்றிய மாணவரணி செயலாளர் S.முருகன் அவர்கள், தேமுதிக நிர்வாகி கள், நெமிலி வணிகர் சங்க உறுபினர்கள் கலந்து கொண்டார். மேலும் பாஸ்டர் மோசஸ் பிரேம்குமார், மற்றும் இமாம் உமர், பொன்னியம்மன் ஆலைய அர்ச்சகர் கோவிந்தன், மற்றும் ஜாமாத் தர்கள், தொகுதி , நகர , கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு.பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக