பாலியல் குற்றம் (POCSO) புரிந்த குற்றவாளிகளுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.12,000/- அபராதம் பெற்று தந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை!
ராணிப்பேட்டை ,மார்ச் 28 -
ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த 28.11.2018-ம் தேதி அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரக்கோணம் தாலுக்கா, பெருமூச்சி கிராமத்தில் ஒரு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எதிரி மோகன்ராஜ் (வ/30) த/பெ வெங்கடேசன் என்பவர் மீது பாலியல் குற்றம் (POCSO) சட்டத்தின் கீழ் அரக் கோணம் அனைத்து மகளிர் காவல்
நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். இவ்வழக்கு இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை துரிதமாக நடைபெற்றது இராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செல்வம் அவர்களால் இவ்வழக்கில் குற்றவாளி மோகன்ராஜ் (வ/30) த/பெ வெங்கடேசன் என்பவருக்கு
20 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.12,000/- அபராதம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் அரசு வழக்கறிஞர் சங்கர் மற்றும் வழக்கின் புலனாய்வு அதிகாரியான காவல்
ஆய்வாளர் வசந்தி (அப்போதைய அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்) வாசுகி (தற்போதைய அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்), மற்றும் நீதிமன்ற காவலர் WHC-308 மாலதி ஆகியோரை இராணிப்பேட்டை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ராணிப்பேட்டை ஒருங்கிணைப்பாளர் எஸ் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக