ஏரலில் M.K.தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 மார்ச், 2025

ஏரலில் M.K.தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா.

ஏரலில் M.K.தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா

01.03.2025 சனிக்கிழமை காலை8.00 மணியளவில்
ஏரல் சந்திரா தியேட்டர் பின்புறம் அமைந்துள்ள
விஸ்வகர்மா கலை வளாகத்தில் 
தமிழக திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

ஏரல் விஸ்வகர்மா பேரவை சார்பில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சியில் ஏரல் வடபத்திரகாளியம்மன் கோயில் பொருளார் மகாராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
கோயம்புத்தூர் சூலூர் (சாத்தான்குளம்) 
நாம் தமிழர் கட்சியின் வீரக்கலை பாசறையின் செயலாளர் சண்முகவேல் பாகவதர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் இனிப்பு வழங்கினார்
சமூக ஆர்வலர்கள் ஐயப்பன் ,கணேசன், கலர்மணி, ஏரல்ராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர் இது ஆறாம் ஆண்டாகத் தொடரும் நிகழ்ச்சியாகும்.

விழா ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல் ராஜன் 
நிகழ்ச்சி முடிவில் நன்றிக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad