தமிழக ஒருங்கிணைந்த முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் (ITVVO) அமைப்பின் சார்பில் காட்பாடியில் நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு விழா!! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

தமிழக ஒருங்கிணைந்த முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் (ITVVO) அமைப்பின் சார்பில் காட்பாடியில் நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு விழா!!

தமிழக ஒருங்கிணைந்த முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் (ITVVO) அமைப்பின் சார்பில்  காட்பாடியில் நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு விழா!!
காட்பாடி , மார்ச் 30 -

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் கேப்டன் திருமணமண்டபத்தில்   தமிழக ஒருங்கிணைந்த முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் (ITVVO) அமைப்பின் சார்பில் அமைப்பின் நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு விழாமற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ITVVO) மாநில தலைவர் கேசவராஜன் தலைமையில் நடைபெற்றது.வேலூர் மாவட்டத்திலுள்ள வெவ்வேறு சங்கங்களின் நிர்வாகிகளுக் கும் அழைப்பு விடப்பட்டு,  முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.  இந்நிகழ்ச்சியில் (ITVVO) மாநில பொதுச் செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி, மாநில துணை தலைவர்  சிவகுமார், மாநில அமைப்பின் மண்டல தலைவர்ஆனந்தன், வேலூர் மாவட்டத்தின் (ITVVO) தலைவர்  ஜெயக்குமார், செயலாளர் முருகேசன், பொருளாளர் ஓம்பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி  ஆலோசகர் நீலகண்டன், துணைத் தலைவர் ஜம்புலிங்கம், துணை செயலாளர் விஜயகுமார், பரதராமி பிஆர்ஓ  பாஸ்கர்,  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.  மேலும், குடியாத்தம் வட்டத்தின் தலைவர் முனுசாமி, கே.வி.குப்பம் தலைவர் கோபி, செயலாளர்  நாகராஜ்,  பொருளாளர் அழகேசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த காட்பாடி சதீஷ்குமார்,  கமலநாதன், வேலாயுதம், அன்பழகன்  மற்றும் அப்பகுதியில் உள்ள அமைப்பின் நிர்வாகிகள் சிறப்புரை யாற்றி விழாவை சிறப்பித்தனர். இறுதியில் செய்தி தொடர்பாளர் ஜி.ஆர்.கே நன்றியுரையாற்றி விழா நிறைவுபெற்றது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad