சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை ( I C D D )
சமுதாய வளைகாப்பு விழா 2025
குடியாத்தம் , மார்ச் 7
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் ரோடு பாபு மஹால் திருமண மண்டபத்தில் இன்று காலை சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்
வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி முன்னிலை வகித்தார்
வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா வரவேற்புரைஆற்றினார்.இந்நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமுதவல்லி சரவணன்
நகர மன்ற உறுப்பினர் ம மனோஜ் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு 21 வகையான சீர்வரிசை உடன்
வளைகாப்பு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் தினேஷ் கர்ப்பிணி பெண்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் இறுதியில் குடியாத்தம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சமிம் ரிஹாணா நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக