குடியாத்தம் , மார்ச் , 27
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட வளத்தூர் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் (DFY) தன் ஆர்வலர் குழு இணைந்து நடமாடும் மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சேட்டு தலைமை வகித்தார்.
இதில் டாக்டர்கள் கிரிஷ்மா, கிஷோர் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காச நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர்.
நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதில் சுற்று பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.முகாமில் செவிலியர் ரம்யா, செவிலியர் உதவி யாளர் கல்பனா, பஞ்சாயத்து செயலாளர் ரேவதி மற்றும் சுகாதார ஆய்வாளர் சரத் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக