ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் உரிய முறையில் தயாரிக்கிறார்களா என்பதை கேள்விக்குறியே - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் உரிய முறையில் தயாரிக்கிறார்களா என்பதை கேள்விக்குறியே

 

AddText_03-17-04.48.10

ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் உரிய முறையில் தயாரிக்கிறார்களா என்பதை கேள்விக்குறியே


நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நாள் பள்ளி மாணவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் தாகம் தீர்க்கும் வகையிலும் குளிர்ச்சி பெறுவதற்காகவும் கடைகள் விற்பனை செய்யப்படக்கூடிய குளிர்பானங்கள் ஜூஸ் வகைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். பள்ளிகள் மற்றும் சாலையோரக் கடைகளில் குளிர்பானங்கள் மற்றும் மாணவர்கள் குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான சிப் அப் எனப்படும் ஜூஸ் வகைகளும் பாக்கெட்டுகளை அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  இவை உரிய பாதுகாப்பு முறைகளுடன் உள்ளதா என்பதை மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக சுத்தமான தண்ணீரில் உற்பத்தி செய்யப்படுகிறதா? அதில் கலக்கப்படும் ரசாயனங்கள் அனுமதிக்கப்பட்டவைகளா? எப்போது தயாரிக்கப்பட்டது எங்கு தயாரிக்கபட்டது என்பதை அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலையாக உள்ளது. மேலும் பல்வேறு கடைகளில் இருந்து விற்பனை செய்யப்படும் இது போன்ற குளிர் பானங்களில் தயாரிப்பு தேதியோ காலாவதி தேதி தெரியுமா எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. 


நேற்று முன்தினம் சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் வசிக்கும் ஜெயபிரகாஷ் என்பவரின் மகன் சேரம்பாடி பகுதியில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் சிப் அப் குளிர் பானத்தை வாங்கி உள்ளார். இதனை  குடித்த குழந்தைக்கு தொண்டை அரிப்பு மற்றும் உதடு அரிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர் 


இது போன்று பல்வேறு பகுதிகளிலும் மாணவ மாணவிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, தாகம் தீர்க்க இது போன்ற குளிர்பானங்களை வாங்கி பயன்படுத்தும் போது உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் பாதுகாப்பற்ற வகையில் விற்பனை செய்யப்படக்கூடிய குளிர்பானங்கள் குறித்து உரிய ஆய்வுகள் நடத்தி தரமற்ற குளிர்பானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விடுத்து உள்ளனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad