நெல்லை மாவட்டம் பழவூர் கிளை நூலகத்தில் தற்போது குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று தலைமை செயலகத்தில் பணி புரிய ஆணை பெற்ற நூலக மாணவர் இ.முருகேஷ் - க்கு பாராட்டு விழா நல்நூலகர் பா.திருக்குமரன் தலைமையில் ஆலோசகர் R.சிவதாணு முன்னிலையில் நடந்தது.
ஜெப்ரினா இறை வணக்கம் பாடினார் மகரஜோதி வரவேற்றார் சிறப்பு விருந்தினராக அறம் வாசகர் வட்ட கௌரவ ஆலோசகரும், அருள்மிகு நாறும்பூ நாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் தா.இசக்கியப்பன் பணி ஆணை பெற்ற E.முருகேஷை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்
நூலக வாசகர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர் சுடலைமணி, அறம் வாசகர் வட்ட துணைச் செயலாளர் மாதவதாஸ், செயற்குழு உறுப்பினர்கள் கபிலன், சிதம்பர கண்ணன்
நூலக நண்பர்கள் சண்முகசுந்தரி,கனி, பேச்சியம்மாள் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
பணி ஆணை பெற்ற இ.முருகேஷ் ஏற்புரை வழங்கினார். நூலக நண்பர் கலைவாணி நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக