கன்னியாகுமரி - அருமனை அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

கன்னியாகுமரி - அருமனை அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கஞ்சி
காச்சி போராட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஆலத்தரை, குழிவிளைச்சாலை பல ஆண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வந்தனர் இது சிறிய பாதையாக இருந்தது அப்பொழுது அருமனை அரசு மருத்துவமனைக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் ஒரே சுவராக இருந்தது இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த சுவர் இடிந்து விழுந்தது. 

தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது அப்படி சுற்றுச்சுவர் எழுப்பும் பொழுது இந்தப் பகுதியில் குடி இருக்கும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்வதற்காக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை தரப்பில் இருந்து இந்த வீடுகளுக்கு செல்ல ஒரு பகுதி வழியை ஒதுக்கி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது 

ஆனால் பள்ளிக்கும் மருத்துவ மனைக்கும் இடையே மிகக் குறைந்த குறுகலான பாதையாக தற்பொழுது உள்ளது தற்பொழுது பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தொடர்ந்து பள்ளி தரப்பில் பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது எனவே மருத்துவமனை தரப்பில் சுற்றுச்சுவர் எழுப்பும் பொழுது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட இடத்தை வழிப்பாதைக்காக விட்டு சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் 

இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் சுற்றுச்சுவர் கட்ட முயற்சி மேற்கொள்கின்றனர் இதனால் தங்களுக்கு வழி பாதைக்கு வழிசெய்து விட்டு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்ல வழி பாதை அமைத்து சுற்றுச்ச்சுவர் கட்ட வேண்டும் என்று இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்,
தமிழன்  T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad