ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று (மார்ச் 18) ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: -ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பின் சார்பாக ஈரோடு மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டால் எங்களது ரத்ததான கூட்டமைப்பின் மூலமாக இலவசமாக ரத்த தானம் செய்து வருகிறோம்.
ரத்த தானம் செய்வது தொடர்பாக நாங்கள் வாட்ஸ்அப் குழு உருவாக்கி அதில் ரத்த தானம் செய்ய ஆர்வம் உள்ளவர்களை இணைத்து அதன் மூலம் ரத்தம் தேவைப்படும் தகவல்களை பகிர்ந்து ரத்ததானம் செய்ய முன்வரும் தன்னார்வலர்களை கொண்டு ரத்த தானம் செய்து பல மக்களுக்கு உதவி செய்து வருகிறோம். மேலும் ரத்தம் தேவைப்படும் தகவல்களை நாங்கள் வாட்ஸ்அப்பில் பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்து அதன் மூலமும் தன்னார்வலர்களைக் கொண்டு ரத்ததானம் செய்து வருகிறோம்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக