வேப்பங்காடு- வீரநல்லூர் சாலை சீரமைப்புமுதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நன்றி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 6 மார்ச், 2025

வேப்பங்காடு- வீரநல்லூர் சாலை சீரமைப்புமுதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நன்றி.

வேப்பங்காடு- வீரநல்லூர் சாலை சீரமைப்பு
முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நன்றி சமூக ஆர்வலர் ராஜபெருமாள், பிரமுகர்கள் கலெக்டருக்கு கடிதம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உடன்குடி ஒன்றியம் வேப்பங்காட்டில் உள்ள சி.பா. ஆதித்தனார் தொடக்க பள்ளியில் நடந்த கட்டடத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் 

வேப்பங்காட்டில் இருந்து வீரநல்லூர் வரை செல்லும் சாலை கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த நிலையில் இருப்பதால், அதனை சீரமைத்து புதிய சாலை அமைத்து தரவேண்டும் என ஊர் மக்கள் சார்பில் சமூக ஆர்வலர் ராஜபெருமாள் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஊர் மக்களின் இந்த கோரிக்கையினை ஏற்று வேப்பங்காட்டில் இருந்து வீரநல்லூர் வரை செல்லும் தார்சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோரிக்கையினை ஏற்று சாலையை புதுப்பித்து கொடுத்ததற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலசிங் ஆகியோருக்கு ஊர்மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ராஜபெருமாள், சேர்மத்துரை, வீதுரன், சங்கீதா ஆகியோர் நன்றி தெரிவித்து கலெக்டருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad