இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! 

ராணிப்பேட்டை, மார்ச் 25 -

 இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சாதியற்ற சமத்துவம் - விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 700 மாணவிகள் கலந்து கொண்டனர்.மேலும் சாதியற்ற சமத்துவம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முனைவர் பூங்குழலி (கல்லூரி முதல்வர் பொறுப்பு),  துணை காவல் கண்காணிப்பாளர்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்), வெங்கடகிருஷ்ணன் (IUCAW), காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா (வாலாஜா காவல் நிலையம்), ரேகா (புள்ளியியல் ஆய்வாளர்) சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad