தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ( கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ) பிரச்சாரம் ! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ( கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ) பிரச்சாரம் !

தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ( கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ) பிரச்சாரம் !
குடியாத்தம் , மார்ச் 25 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாது காப்பு கூட்டமைப்பு பிரச்சார பயண குழு சார்பில் கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் வேலூர் மாவட்ட தலைவர் எஸ் இமயவர்மன் தலைமை தாங்கினார் மாநிலத் தலைவர் ஆ கதிர்வேல் மாநில செயலாளர் ராம கவுண்டர் மாநில பொருளாளர் கே செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விலக்கிப் பேசினார்கள் இணையதளம் தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நலவாரிய உறுப்பினர் களுக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் ரூபாய் 1200 ஜ 3 ஆயிரம்மாக உயர்த்தி வழங்க வேண்டும் நலவாரிய தலைவர் உறுப்பினர் பதவிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு தனி துறைஉருவாக்க வேண்டும்
தொழிலாளிக்கு இ எஸ் ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வு ஊதியம் பெறும் தொழிலாளிக்கும் இயற்கை மரண உதவித்தொகை ரூபாய் 55 ஆயிரம் வழங்க வேண்டும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளிக்கு தொழில் தொடங்க ரூபாய் 3 லட்சம் கடன் உதவி வழங்க வேண்டும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு நிதி தவிர்த்து நல வாரியத் தின் மூலம் நான்கு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத் தப்பட்டன நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாகிகள் விஜி பழனி கே சுயராஜ் வி சரளா எம்.எஸ். கேசவ மூர்த்தி எஸ் மதியழகன் ஆர் ஜெயவேலு கே வீராசாமி எஸ் எ குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா கட்சி செயலாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad