கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

IMG-20250328-WA0010

 கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் 


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் பகண்டை கூட்ரோட்டில் ₹ 25 லட்சம் மதிப்புள்ள பயணியர் நிழற்குடை கட்டிக் கொண்டிருக்கும்போதே தரம் இல்லாத காரனத்தால் நேற்று இடிந்து விழுந்த நிலையில்,  ஒப்பந்ததாரரையும், இதற்குத் துணைநின்ற ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் M.L.A.அவர்களையும் கண்டித்து மாவட்ட தலைவர் பேராசிரியர்  Dr.M.#பாலசுந்தரம்_தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ் விவசாய அணி மாநில பொறுப்பாளர் ஆச,ரவி முன்னாள் மாவட்ட பொது செயலாளர் ரவி, செந்தில், ஜோதிநாதன் மணிமாறன் மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ், முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய,  கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 


கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad